சமீபத்தில் சானியா மிர்சா வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மிக முக்கிய டென்னிஸ் நட்சத்திரமாக வலம் வந்தவர் சானியா மிர்சா. அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த அளவிற்கு தன் விளையாட்டு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் விளையாட்டில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்ட சானியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது கணவருடன் ராஜஸ்தானி விருந்து ஒன்றில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சானியா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பு தான் என்றாலும், அந்த காலத்துக்கேற்ப உடைகளை தேர்வு செய்வது அவசியம் கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பின் சானியாவை புகைப்படத்தில் பார்த்துள்ள அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சானியாவின் அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Discussion about this post