இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் டைட்டில் நாளை வெளியாகவுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ பட வெற்றியைத் தொடர்ந்து ‘புரியாத புதிர்’ இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதுப்படத்தில் நடிக்கவுள்ளார். ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் வெளியாகவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்த ஹரிஷ், தனது நடவடிக்கைளால் மக்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நாயகனாக அவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ அமோக வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post