சர்ச்சைக்கு பெயர்போன முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து எனக்கு தமிழ் மொழி புரியாது. அந்த மாநில உணவு பிடிக்காது எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தென் மாநிலங்களை விட பாகிஸ்தான் கலாசாரம் நன்றாக உள்ளது எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீர் நவ்ஜோத் சித்து, பஞ்சாப் மாநில கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு சென்ற அவர், அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட சித்துவிடம், பஞ்சாப் மாநிலத்திற்கும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சித்து அளித்த பதில், நான் தமிழகம் சென்றால், அந்த மாநில மொழி எனக்கு தெரியாது. வணக்கம் உள்ளிட்ட ஒரிரு வார்த்தைகள் மட்டுமே தெரியும். அந்த மாநில உணவும் பிடிக்காது. இட்லி சாப்பிட்டிருந்தாலும், அதனை நீண்ட நாட்கள் சாப்பிட முடியாது. அந்த கலாசாரம் முற்றிலும் வேறு. ஆனால், பாகிஸ்தான் சென்றால், மொழி வித்தியாசம் இருக்காது. அங்கு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பா.ஜ.க, அகாலி தள கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Discussion about this post