விஜய் – அட்லி மூன்றாவதாக இணையும் திரைப்படம் இப்போதைக்குச் சாத்தியமாகத் தெரியவில்லை. மின்னம்பலத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டது போலவே அட்லி மீது செம அப்செட்டில் இருக்கிறார் விஜய். மெர்சல் படத்தின் கதை மூன்று முகத்தின் தழுவல் என்று கூறி, மூன்று முகம் உரிமையை வாங்கியிருக்கும் கதிரேசனுக்கு செட்டில்மென்ட் செய்யச் சொல்லி எடுக்கப்பட்டிருக்கும் முடிவு விஜய்யை ட்ரிகர் செய்திருக்கிறது. ரஜினி திரையுலகில் இருக்கும்போதே அவர் படத்தை ரீமேக் செய்தார் விஜய் எனச் செய்திகள் வெளியாவதை அவர் விரும்பவில்லை. எனவே, தான் அடுத்த படத்தின் கதையை எல்லா விதத்திலும் அலசி தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார் விஜய். இதனை மின்னம்பலத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது எதற்கு இந்தத் தகவல் என வாட்ஸ் அப் கேட்டதும், ஃபேஸ்புக் தனது மெஸேஜ்களை வரிசையாகப் பதிவு செய்தது.
“ரஜினியின் பழைய படத்தை ரீமேக் செஞ்சதுக்கே விஜய் அவ்வளவு அப்செட் ஆகிட்டார்னு சொன்னாங்களே. இப்ப சுட சுட தயாராகிட்டு இருக்கும் பேட்ட படத்தையே அட்லி ஆட்டைய போட்டுட்டதா சொல்றாங்க. பேட்ட படத்துல ஒரு காலேஜ் வார்டனா வர்றார் ரஜினி. இதையும் மின்னம்பலத்துலதான் சொல்லியிருந்தோம். அப்படி காலேஜ் வார்டனா வர்ற ரஜினி, ஸ்டூடண்ட்ஸ்குள்ள நடக்கும் ஒரு பிரச்சினைல, பாட்ஷா படம் மாதிரியே ஒரிஜினல் முகத்தைக் காட்டுறார். அங்கே இருந்து ஃப்ளாஷ்பேக் போனா, மீசையும் வெள்ளை வேட்டி சட்டையுமா மதுரைல பெரிய ரவுடியா இருக்காராம்.
அங்கே அதட்டலா, அராஜக ரவுடியா இருக்குறவர் எதனால ஏதோ ஒரு குளிர்பிரதேச காலேஜ்ல வார்டனா போறாருன்றது தான் கதையோட மையக்கரு. இது நல்லா இருக்குன்னு எல்லாரும் பாராட்ட, இதே கதையைத்தான் அட்லியும் விஜய்கிட்ட சொல்லிருக்காருன்ற மேட்டர் வெளிய தெரிஞ்சிருக்கு. தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படத்துலயும் விஜய்க்கு ஃப்ளாஷ்பேக் நல்லா ஒர்க்-அவுட் ஆகியிருந்ததால இந்தப் படத்துலயும் ஒரு ஃப்ளாஷ்பேக்கை வைக்கணும்னு முடிவெடுத்திருக்காங்க. இது ரஜினி படக் கதையோட மேட்ச் ஆகும்னு அட்லி எதிர்பார்த்திருக்க மாட்டார். மதுரை ஏரியா இரண்டு கதையிலும் பொதுவா இருந்ததுக்குக் காரணம், இயக்குநர்களோட ஒரே வேவ்லென்த் செட்-அப் இல்லையாம்.
ரஜினி-விஜய் இரண்டு பேரும் குறிப்பா தென்தமிழ்நாட்டுல நடக்குற மாதிரி கதை வேணும்னு கேட்டதால, தென்தமிழகத்தோட மையப் பகுதியான மதுரையைத் தேர்ந்தெடுத்தது இயல்புதானே. பேட்ட படத்தோட கதை, அட்லி கதை மாதிரி இருந்ததாலே… ஒரு நிமிஷம். அட்லி எழுதுன கதை, பேட்ட படத்தோட கதை மாதிரியே இருந்ததாலே கதையை மாத்தி எடுத்துக்கிட்டு வாங்கன்னு விஜய் சொல்லிட்டாராம். அதனாலதான் ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாலயே அடுத்தப் படத்தோட அறிவிப்பை வெளியிடுவதை வழக்கமா வெச்சிருந்த விஜய், சர்கார் ரிலீஸ் இவ்வளவு நெருங்கியும் அமைதியா இருக்காராம்”
Discussion about this post