பாலியல் புகாரில் சிக்கிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதனால் தந்து அமைச்சர் பதவியை ராஜினமா செய்து ராஜினமா கடிதத்ததை மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #MeToo மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் குவிந்து வருவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பதவியை ராஜினமா உடனடியாக செய்யவேண்டும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இதனால் தந்து அமைச்சர் பதவியை ராஜினமா செய்து ராஜினமா கடிதத்ததை மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார்.
"Statement later," says #MeToo-accused MJ Akbar after landing in Delhi
Read here: https://t.co/I8vF4v6VW1 pic.twitter.com/vAjaXQbHRD
— NDTV (@ndtv) October 14, 2018
நேற்று அக்பர் மீதான் பாலியல் புகார் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கேள்வி கேட்டபோது, #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வந்த புகாரை குறித்து நிச்சயம் விசாரிக்கப்படும். புகார் யார் தந்தது, அவர்களின் பின்னணி என்ன? புகாரின் உண்மைதன்மை என்ன? போன்ற விசியங்களை ஆராய்ந்து, பின்னர் முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சரே இன்று தந்து பதவியை ராஜினமா செய்ததாக கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆறு பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிவந்த நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று இரவு பதினொன்றை எட்டியது.
Discussion about this post