எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது மற்றும் ஜோடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், தன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றியவர். பெண்கள் தங்களுக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தல்களை மீடூ (Me too) பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு எதிராக பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.
பத்திரிக்கையில் அவருடன் பணியாற்றிய போது எவ்வாறெல்லாம் மோசமாக நடந்துக்கொண்டார் என்பதை பெண் பத்திரிக்கையாளர்கள் விரிவாக தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய எம்.ஜே. அக்பர், தன்மீதான பாலியல் புகார்களுக்கு உரிய விளக்கத்தை வெளியிடுவேன் என குறிப்பிட்டிருந்தார்.
இன்று காலை டெல்லி வந்த அவர் தனதுராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திரமோடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினார்.
இதனிடையே தன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஜே.அக்பர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தவறாக நடந்து கொண்டதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. ஆதாரமற்றது. வெளிநாட்டில் இருந்ததால், அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. பாலியல் புகார் அளித்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
பொதுத்தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது போன்ற பிரச்னைகள் அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்படுகிறது. இதன் பின்னணியில் ஏதேனும் திட்டம் உள்ளதா? என கண்டுபிடிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன். பொய்க்கு கால்கள் இல்லை என்றாலும், அவை விஷம் போன்று வேகமாக பரவுகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் அக்பர் கூறி உள்ளார்.
Discussion about this post