தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆயிரம் ரேஷன் கடை உரிமையாளர்கள் நாளை (15.10.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் நுகர்பொருள் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தால் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் எனவும் கூறினார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
Discussion about this post