தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள வட சென்னை படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரகனி என பலர் நடித்துள்ள இப்படம் வட சென்னை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்ட இப்படம், ‘ஏ’ சான்றிதழைப் பெற்றது. தனுஷும் இப்படம் ராவாக வெளியாகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் இப்படம் 2 மணி நேரம் 46 நிமிடம் ஓடக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளியான பொல்லாதவன் 2 மணி நேரம் 30 நிமிடம் எனும் ரன்னிங் டைமைக் கொண்டிருந்தது. அதன் பின்னர் வெளியான ஆடுகளம் 2 மணி நேரம் 40 நிமிடம் எனும் ரன்னிங் டைமைக் கொண்டிருந்தது அந்தவகையில் கணக்கிட்டால் அந்த இரண்டு படங்களைவிடவும் இந்தப் படத்தினுடைய ரன்னிங் டைம் அதிகமாகவே அமைந்துள்ளது.
Discussion about this post