சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
2004ஆம் ஆண்டு வீழமாட்டோம் ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து அப்போதே மறுப்பும் தெரிவித்தார். ஆனால் சின்மயி பல்வேறு ஆதாரங்களை தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தார். அடுத்தகட்டமாக மீ டூ ஹேஷ்டேக்கில் பலருடைய பாலியல் துன்புறுத்தல்களையும் தொடர்ந்து தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டு வந்தார். இது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒருவாரத்துக்குப் பிறகு மீண்டும் தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்து காணொளி ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளிப் பதிவில் அவர் கூறுகையில், “என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒருவார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
#Vairamuthu Tamil poet has come with a self clarification and says Chinmayi and others are making false allegation and all rubbish. I will definitely cooperate with any kind of enquiry and finally justice will prevail. #MeToo pic.twitter.com/iSX9z6zheY
— IndSamachar News (@Indsamachar) October 14, 2018
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சின்மயி, “வைரமுத்துவை உண்மை கண்டறியும் கருவியில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதுவே போதுமென்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post