நடிகை பூஜா குமார் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் வாயிலாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா குமார். அதன் பின்னர் ரமேஷ் அரவிந்த் இயக்க, கமல் எழுதியும், நடித்தும் இருந்த உத்தம வில்லன் எனும் படத்திலும் நடித்திருந்தார். பின்னர் விஸ்வரூபம்-2 படம் உருவாகவே, அந்தப் படத்திலும் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் பூஜா குமார்.
இந்நிலையில் இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கும் இந்திப் படமான தி இன்விஸிபிள் மாஸ்க் எனும் படத்தில் முன்னணி ரோலில் தற்போது நடிக்கவுள்ளார் பூஜா. மத்திய தரக் குடும்பப் பெண்ணாக பூஜா இதில் நடிக்கவுள்ளார். தற்போதைய நவீன பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.
இப்படம் மட்டுமல்லாது ப்ரியதர்ஷன் இயக்கும் மரக்கார்: அரபிக்கடலிண்டே சின்ஹம் எனும் படத்திலும் பூஜா நடிக்கலாம் எனக்கூறப்படுகிறது. ஆனால் அந்தப் படத்தில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Discussion about this post