தாய்லாந்து உயிரியல் பூங்காவில் புலியுடன் அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுமுறைப் பயணமாக அண்மையில் தாய்லாந்து சென்றிருந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த புலியுடன் அச்சமின்றி பழகியுள்ள அவர், அந்த புலியின் வாலைப் பிடித்து தடவிக் கொடுப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
ட்விட்டரில் வெளியான அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் மடியில் சிங்கக் குட்டி இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post