கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் மெர்சல் எப்படி பரபரப்பை ஏற்படுத்தியதோ, அதை விட ஒரு படி மேலான பரபரப்பை சர்கார் ஏற்படுத்தப்போகிறது. இதனை சமீபத்தில் நடைபெற்ற சர்கார் இசை வெளியீட்டுவிழா உறுதி செய்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்கார் இசை வெளியீட்டு விழாவின் போது தளபதி விஜய்-ன் பேச்சு அவரின் அரசியல் வரவுக்கான ஆரம்பம் என்றே ஊடகங்களில் பேசப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயமாக இருந்தாலும், அரசியல்வாதிகளுக்கு இன்னொரு தலைவலியாக அமைந்திருக்கிறது.
ஏற்கனவே ரஜினி மற்றும் கமல் போன்ற இரண்டு பிரம்மாண்ட நட்சத்திரங்களின் வரவு ஒரு பக்கம், தமிழக அரசியல் கட்சிகளுக்கு போட்டி கொடுத்திருக்கும் நிலையில் , விஜயும் அரசியலுக்கு வந்தால் கதை அவ்வளவு தான் என தலையில் கைவைத்திருக்கின்றனர் பல முன்னணி அரசியல் பிரபலங்கள்.
இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் குறித்து பேசிய மக்கள் மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ,பின்வருமாறு தன்னுடைய கருத்தினை தெரிவித்திருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக இருந்தால் என் கட்சியில் இணையுமாறு அவரை கையை பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தவெல்லாம் முடியாது.
ஆனால அவருக்கு விருப்பம் இருந்தால் என் கட்சியில் அவருக்கு ஒரு இடம் உண்டு என்று தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த கருத்து பலருக்கும் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ரஜினி விரைவில் கட்சி தொடங்கவிருக்கிறார் எனும் தகவல் வேறு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தன்னுடைய கட்சிக்கு பலம் சேர்க்க, விஜயி தன் பக்கம் இழுக்க பார்க்கிறார் கமல் என பலரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கின்றனர். உலக நாயகனின் இந்த அரசியல் சாணக்கியத்தனம் எல்லாம் தளபதி விஜயிடம் செல்லுபடியாகுமா என பொறுத்திருந்து பார்த்தால் தானே தெரியும்
Discussion about this post