ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பியார் பிரேம காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக “காளி” படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை மாதவ் மீடியா தயாரித்து வருகிறது. சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி நடித்த “புரியாத புதிர்” என்ற படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post