தமிழில் பேராண்மை, அரவான், பரதேசி, போன்ற தனித்துவம் வாய்ந்த படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தன்ஷிகா. இவர் நடிப்பில் மட்டுமின்றி தற்காப்பு கலைகளை கற்று வருவதிலும் தீவிர ஈடுபாட்டை காட்டி வருகிறார். கடைசியாக கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை தன்ஷிகா. அதனை தொடர்து சமுத்திரகனி இயக்கி தற்போது நான்கு மொழிகளில் தயாராகும் “கிட்னா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி உடன் இருட்டு என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
நடிகை தன்ஷிகா படத்தில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்விலும் அதிரடியானவராகவே உள்ளார். நடன இயக்குனர் சாண்டியின் நடன பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட தன்ஷிகா மேடையில் ஏறி சிலம்பம் சுற்றியது அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. தன்ஷிகா சிலம்பம் சுற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பலர் தன்ஷிகாவை பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post