மனித மனம் மரத்து விட்டதோ ஏன் தினமும் டயாபர்களை வாங்கி குழந்தைகளை துன்புறுத்துகிறீர்கள். பேபி டயாபர்களில் குறிப்பிட்டுள்ள வாசகமே ”ஒன் பேம்ப்பர்=ஒன் நைட்” என்பதுதான். அதாவது இந்த ஒரு டயாபரைக் குழந்தைக்கு அணிவித்து விட்டால், இரவு முழுதும் குழந்தையின் சிறுநீரானது இதன் பஞ்சுப் பகுதிகளால் உறிஞ்சப்பட்டு, அதில் உள்ள வேதிப் பொருட்களால் ஜெல் நிலைக்கு மாற்றப்படுகிறது.
இதனால் குழந்தை ஈர உணர்வால் அழாமல் இரவு முழுதும் தூங்கும். அதைவிட முக்கியமாகக் குழந்தை அழுது பெற்றோர்களின் தூக்கம் கலைந்து எழுந்து, குழந்தை சிறுநீர் கழித்த அந்த ஈரத்துணியை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.பெரியவர்களான நாமே இரவு நேரத்தில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துத் தளர்வான லுங்கி, நைட்டி முதலான ஆடைகளை அணிகிறோம். ஆனால் இந்தப் பச்சிளம் குழந்தைகளுக்குக், காற்றோட்டத்துக்கு வாய்ப்பே இல்லாத இந்த டயாபர்களை தினசரி அணிவிப்பது எந்த வகையில் சரியான செயலாக இருக்க முடியும்?
வெளியூர் பயணமென்றால் அதிலும் பாவம் அந்தக் குழந்தைகள், நாள் முழுதும் டயாபர்களால்தானே சுற்றப்பட்டு இருக்கின்றன.போதுமான காற்றோட்டம் இல்லாததாலும், சிறுநீரை ஜெல்லாக மாற்றும் வேதிப் பொருட்களின் தாக்கத்தாலும் அலர்ஜியாகிக் குழந்தைகளின் பிறப்புறுப்பில் அரிப்பு புண்கள் போன்றவை தோன்றுகின்றன. ஆனால் அலட்டிக்கொள்ளாத நாம் அதற்கும் ஒரு ஆயிண்ட்மென்ட்டைப் பூசிவிட்டு அடுத்த டயாபரை மாட்டி விடுகின்றோம்.
இந்த டயாபர்களின் உபயோகம் இல்லாமல்தானே நமது தாய் தந்தையர் 4, 5 குழந்தைகள் வரையும், நமது தாத்தா பாட்டிகள் 8, 10 குழந்தைகள் வரையிலும் வளர்த்தனர்! அவர்கள் நம்மை வளர்க்க எத்தனை இரவுகளில் எத்தனை முறை தூக்கத்தில் விழித்திருப்பார்கள் நாம் வளர்ப்பது ஒன்றோ இரண்டோதானே, பெற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தைவிட நிம்மதியான தூக்கம் முக்கியம் என்கிற அளவுக்கு மனித மனம் மரத்துவிட்டதோ.
என்ற அவரின் கேள்வியும், வருத்தமும் நியாயமானதுதான். தயவு செய்து குழந்தைகளுக்கு பேபி டயாபர் உபயோகிப்பதை குறையுங்கள். குறிபாக இரவு முழுவதும் டயாபர் உபயோகிப்பதை அறவே தவிருங்கள். அது கண்டிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு மட்டுமே உண்டாக்கும். குழந்தைகளை டயாபரில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
Discussion about this post