கமலின் பாணியை பின்பற்றி இப்போது வெள்ளித்திரை நடிகரான விஷாலும் சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் விஷாலின் நண்பரும் நடிகருமான கார்த்தி சமீபத்தில் கலந்து கொண்டார். அப்பொது விஜய் ரசிகரான 18 வயது இளைஞர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து வந்த அந்த ரசிகர், ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டு , தன் கைகளை இழந்துவிட்டார். இதனை நிகழ்ச்சியின் போது பார்த்து மனம் உருகிய மக்கள் அவருக்கு தங்களால் ஆன உதவியை செய்ய முன்வந்தனர்.
சமீபத்திய நிகழ்ச்சியின் போது கலந்து கொண்ட கார்த்தியும் அந்த நபருக்கு உதவும் விதமாக ஒரு செயலை செய்திருக்கிறார். நிகழ்ச்சியின் போது தோசை சுட்டுக்கொடுத்த கார்த்தி தான் சுட்ட தோசை ஒவ்வொன்றையும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். அவ்வாறு தோசை விற்றதன் மூலம் சம்பாதித்த பணத்தை அந்த விஜய் ரசிகருக்கே கொடுத்திருக்கிறார்.
மேலும் இது போன்று பிறர் கொடுத்து உதவி இருக்கும் பணத்தை கொண்டு அந்த விஜய் ரசிகர் விரைவில் ஹோட்டல் ஆரம்பிக்க போகிறார் என்ற நல்ல செய்தியையும் அந்த நிகழ்ச்சியின் போது கார்த்தி தெரிவித்திருக்கிறார். கார்த்தியின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
Discussion about this post