ஆயுத பூஜைக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் காத்திருக்கிறது. மாஸ் மசாலா ஜானரில் சில ஆண்டுகளுக்கு முன் வெற்றித்தடத்தை அழுத்தமாக பதித்த விஷால் – லிங்கு கூட்டணியின் ‘சண்டக்கோழி’யின் சீக்வெல்! அதான் பாஸ் பார்ட் 2 ரிலீஸாகிறது.
‘அருவாவ பார்த்து ஆடு பயப்படலாம்! அய்யனார் பயப்படுவாரா?’ என்று ராஜ்கிரணின் ரகளை வசனத்துக்கு டீஸரிலேயே லைக்ஸ் அள்ளிக் கொட்டுகிறது.
ச.கோ!வின் சரசர களமிறங்களுக்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கும் அதே நொடியில் அடர்த்தியான கதையுடன், ஆஸம் நடிகர்களுடன் நிதானமாய் திரை தொடுகிறது இதுவரை எடுத்த படங்களில் எல்லாம் வெற்றியை மட்டுமே தொட்டிருக்கும் வெற்றிமாறனின் ’வடசென்னை’ பார்ட் 1.
பொதுவாக ஒரு படம் ஹிட்டடித்தால் அதன் பார்ட் 2வை எடுக்கலாமா? என்று யோசிப்பார்கள், பேசுவார்கள் பின் களமிறங்குவார்கள். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் பார்ட் 1-க்கு பூஜை போடும்போதே ‘3 பாகங்களாக இதை எடுக்க இருக்கிறோம்.’ என்று அறிவித்து திரையுலகை தெறிக்கவிட்டபடிதான் வந்தார்கள். இதோ பார்ட் -1 ரெடியாகி திரையை தொடுகிறது.
இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி மெதுவாய் திருவாய் மலர்ந்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், “வட சென்னை படத்தோட முழு கதையும் ஒரு எண்பது பக்க நோட்டில்தான் இருக்கிறது. மூணு பார்ட்டுக்கான கதைகளும் இதுல தான் இருக்குது. முதல் பார்ட்டுக்கான சீன்ஸை ரெடி பண்ணிட்டு களமிறங்கிட்டோம். எடுத்து முடிச்சுட்டு ரஷ் போட்டுப் பார்த்தா ரெண்டாவது பார்ட்டுக்கான இருபது நிமிஷ படமும் அதுல ரெடியா இருக்குது. ஆக அதை அப்படியே தூக்கி அந்தப்பக்கம் வெச்சுட்டோம்.
இந்த எண்பது பக்க நோட்டு மட்டும் இல்லேன்னா வடசென்னை படமேயில்லை. தனுஷை இதுவரை தர லோக்கலா பார்த்திருப்பீங்க, இதுல அவரு அதையும் விட்டிறங்கி கட்டாந்தரை லோக்கலா பர்ஃபார்ம் பண்ணி பேர்த்திருக்கார்.” என்கிறார் தாடியை நீவியபடி.
இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால் வடசென்னை பார்ட் 2 முழுமையாக உருவாகும் முன்பாக தனுஷ் மற்றும் வெற்றி இருவரும் இன்னொரு புதிய படத்தை எடுக்கிறார்களாம்.
ரெண்டு பேருக்கும் நடுவுல அப்படி என்னதான் பெவிகால் இருக்குதோ!?
Discussion about this post