எத்தனையோ பஞ்ச் டயலாக்குகளை சொல்லி ரசிகர்களை தெறிக்கவிட்டிருக்கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். ஆனால் இன்று ஒரேயொரு வார்த்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ஆண் புள்ளிகளையும் அலற விட்டுக் கொண்டிருக்கிறது.
அது….” #மீ டூ ” என்பதுதான்.
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிராக சின்ன சின்மயி தொடுத்துள்ள போரின் விளைவுகள் பலரை பாதிக்க துவங்கியுள்ளன. வைரத்தை நோக்கி மட்டுமே கத்தி தீட்டிக் கொண்டிருக்கும் சின்மயியிடம் ‘நீங்கள் வைரமுத்துவால் மட்டும்தான் இந்த துறையில் பிரச்னைக்கு உள்ளானீர்களா? இன்னும் சிலர் இருக்கிறாரென்றால் அவர்களின் பெயரையும் சொல்வதில் என்ன தயக்கம்?’ என்று சிலர் கேள்வி எண்ணைய்யை ஊற்றி தீயை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமியோ மிக கர்வமாக “இன்று துவங்கியுள்ள இந்த ‘மீ டூ’விழிப்புணர்வை ஒரு வருடத்துக்கு முன்பே நான் ‘சேவ் சக்தி’ இயக்கத்தின் மூலம் துவங்கிவிட்டேன்.
எனக்கு யாரைப் பார்த்தும் பயமில்லை. எதுவாக இருந்தாலும் துணிச்சலாக, வெளிப்படையாக பேசுவேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அரபு நாடுகள் போல் தண்டனை முறை வந்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறையும்.
எனது துணிச்சலான பேச்சு மற்றும் கருத்துக்களால் திரையுலகில் எனக்கு தனி மரியாதையும், என்னை கண்டால் ஒருவித பயமும் உருவாகி இருப்பதை உணர்கிறேன். இது என் நேர்மைக்கான வெகுமானம்.” என்றிருக்கிறார்.
வருவின் இந்த வெடி பேச்சு தமிழ் திரையுலகின் மூத்த கில்லாடிகள் சிலரை எரிச்சலாக்கியுள்ளதாம். அவர்கள் நேற்று இரவில் கூடி பேசி சில முடிவுகளை எடுக்க, அது சில துணை இயக்குநர்களின் சோஷியல் மீடியா பக்கங்களின் வாயிலாக வெளியாகி இருக்கிறது.
அதில் “பாலியல் பிரச்னைக்கு எதிராக பேசணும்னா முதல்ல நீங்க உங்க அப்பா சரத்குமாரையும் கேள்வி கேட்கணும் வரலட்சுமி.
உங்க அம்மா சாயாவை இரண்டு மகள்களோடு தவிக்கவிட்டு, நக்மாவோடு அவருக்கு இருந்த நட்பும், திடீரென ராதிகாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானதும் எந்த ரகமாம்.உங்கள் அம்மாவை கேளுங்கள், நிச்சயம் அவர் பார்வையில் அது பாலியல் அத்துமீறல்தான்! அதை செய்தால் உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம். அதுவரையில் இந்த பயம், கியம்! அப்படின்னெல்லாம் சிறுபுள்ளை மாதிரி பேசாதீங்க.” என்று வெளுத்திருக்கிறார்கள்.
அடேய்….ச்சும்மா இருக்கிற சரத்குமாரை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க?
Discussion about this post