சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காயத்ரி. இவாக்ள இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு, காயத்திரி வீட்டை விட்டு வெளியேறி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இன்று காலை 9 மணிக்கு தனது 2 மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்திரி மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். குகை மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென மொபட்டை வழிமறித்து காயத்திரியின் முகத்தில் ஆசிட்டை வீசினார்.
இதில் காயத்திரியின் முகத்தின் வலது பக்கம், நெஞ்சு பகுதி மற்றும் கால் பகுதி வெந்தது. ஆசிட்டை ஒரு புறமாக மர்ம நபர் வீசியதால் அது மெல்ல மெல்ல உடலின் ஒரு பக்கமாக பரவியது. வலி தாங்க முடியாமல் காயத்ரி கதறி அழுதார்.இதையடுத்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காயத்திரி மீது ஆசிட் வீசியவர் பக்கத்து தெருவை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன்என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
பக்கத்து தெரு என்பதால், சீனிவாசனுக்கும், காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதையறிந்த காயத்திரியின் பெற்றோரும், உறவினர்களும் காயத்ரியைக் கண்டித்துள்ளனர். இதனால் சீனிவாசனுடன் அவர் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் விடாமல் காயதிரிக்கு சீனிவாசன் பேசும்படி டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் , காயத்ரியின் மீது இன்று முசிட் அடித்துவிட்டு தப்பியோடிவிட்டார். தற்போது தலைமறைவாக உள்ள சீனிவாசனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Discussion about this post