ஈரல் வலி குறைய ஆடாதொடை இலைச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மூச்சுத்திணறல் குணமாகும். நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாக மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்..
காசம் குணமாக வேண்டுமென்றால் ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும். உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலிகள் குறையும்.
சளித்தொல்லை குறைய ஆடாதொடை இலை,வெற்றிலை, துளசி,தூதுவளை இவைகளை எடுத்து லேசாக அரைத்து வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும். வயிற்று வலி குறைய ஆடாதொடை இலையையும், சங்கிலையையும் எடுத்து தண்ணீரில் போட்டு காய்ச்சிக் குடித்து வந்தால் வயிற்று வலி குறையும்.
ஆடாதொடையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயொகிக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இந்த ஆடாதொடை மருந்து இருக்க வேண்டும். குழந்தைகளின் சளித் தொல்லையிலிருந்து விடுதலைப் பெற ஒரு சிறந்த மருந்தாகவும் செயல்ப்படுகிறது.
Discussion about this post