இளம் மற்றும் புதிய இயக்குநர்கள் பக்கம் ரஜினி தலைவைக்கவே மாட்டார். அவருக்கு தேவை ஹிட் கொடுத்த அனுபவ இயக்குநர்கள் மட்டுமே! என்கிற நீண்டநாள் விமர்சனத்தை சமீபகாலமாக அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். கபாலி, காலா என்று இளம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்தார். அந்த ஆச்சரியம் நீங்கும் முன் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து ‘பேட்ட’யில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கார்த்திக்கும் தன் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனிடமிருந்து நழுவி அனிருத் உடன் கைகோர்த்திருக்கிறார் இந்த படத்தில். இந்நிலையில் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஒரு தேவாலயத்தின் கதவை திறந்து கொண்டு ரகளையாக ரஜினி நடந்து வருவது போல் மோஷன் காட்சிகள். இதற்கான பி.ஜி.எம். (பேக் கிரவுண்ட் மியூஸிக்) வழக்கமான ரஜினிகாந்த் படத்துக்கானதாக கதறியிருந்தன.
இந்நிலையில் மோஷன் போஸ்டர் காட்சிகள், ரஜினியின் லுக், கேமெரா கலர்ஸ் எல்லாமே பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் பி.ஜி.எம். மட்டும் ஹாலிவுட்டிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அது எந்தப்படத்தில் இருந்து உருவப்பட்டுள்ளது, அதன் இசையமைப்பாளர் யார்? என்பதையெல்லாம் ஆதாரத்துடன் கமெண்ட்ஸ் பக்கங்களில் போட்டுப் பொளந்தார்கள் கில்லாடி ரசிகர்களும், விமர்சகர்களும்.
இந்த விஷயம் ரஜினியின் காதுகள் வரைக்கும் போக, மனிதர் டென்ஷாகிவிட்டார். தன் ஆஸ்தான இசையமைப்பாளரை விட்டு நகர்ந்து வந்து புது முயற்சியில் இறங்கிய கார்த்திக் சுப்புராஜ்-ம் டென்ஷனாகிவிட்டார்.
இந்நிலையில் அனிருத்தை அழைத்துப் பேசிய ரஜினி “ ஓ.கே. போனது போகட்டும். உன்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைச்சிருக்கேன். முழு சுதந்திரமும், தேவையான நேரமும் எடுத்துக்க. செம்ம ஃப்ரெஷ்ஷா டியூன்ஸ் வந்து விழணும். யாரும் நம்மை விரல் நீட்டி எதுவும் சொல்லிடக்கூடாது. மானத்தை வாங்கிடாதடா மருகமனே. ஹ்ஹா ஹாஹ் ஹா!” என்று சிரித்து தட்டிக் கொடுத்திருக்கிறார் அனிருத்துக்கு.
‘காப்பியடிக்காத ஒரிஜினலா டியூன் போடு!’ என்று சின்ன பையனிடம் சுருக்கென்று சொல்லாமல், பதமாக பேசி எச்சரிக்கை செய்திருக்கிறார் அனிருத்தின் அங்கிளான ரஜினி.
ரஜினியின் மனைவி லதாவின் தம்பியான நடிகர் ரவிசந்தரின் மகன் தானே அனிருத்!
மாம்ஸ் மானத்தை காப்பாத்துங்க ப்ரோ!
Discussion about this post