சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்துவருகிறார் . முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரஜினிகாந்தின் திரை உலக பயணத்தில் சமீபகாலமாக பல அதிரடி மாற்றங்கள் காணப்படுகிறது அதற்கு ஏற்ப வித்தியாசமானதாகவும், தன் வயதுக்கு ஏற்ற மாதிரியான கதைகளையுமாக தேர்வு செய்து நடித்து வருகிறார் ரஜினி. கபாலி, காலா படங்களை தொடர்ந்து இந்த பேட்ட படமும் அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது.
ரஜினியின் படம் என்றாலே அதுகுறித்த தகவல்களை அறிந்திட அவரது ரசிகர்கள் மட்டுமல்ல கோலிவுட் வட்டாரமே ஆவலுடன் காத்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தூண்டும் விதமாக அமைந்திருந்தது சமீபத்தில் வெளியான பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர். அதே சமயம் பேட்ட படத்தின் ஷீட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுக்கப்பட்ட சில படங்களும் கூட அவ்வப்போது லீக் ஆகி , படக்குழுவினரை அப்செட் ஆக்கி இருக்கிறது.
இந்த தலைவலிகளுக்கெல்லாம் இடையே தற்போது இது தான் பேட்ட படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு கதை உலாவருகிறது. இந்த படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடித்திருக்கிறார் எனும் தகவல் ஏற்கனவே வெளியானது தான். இந்த ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் ரஜினி , மாணவர்களுக்கு மத்தியில் நடக்கும் ஒரு சண்டையின் போது தான் தன்னுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்துகிறார்.
பாஷா படம் பாணியில் வரும் அந்த ப்ளாஷ்பேக்கில், மதுரையில் மிகப்பெரிய தாதாவாக வலம் வரும் ரஜினி, எதனால் இந்த குளிர்பிரதேசத்தில் வார்டனாக ஆகி இருக்கிறார் என்பது தான் மீதிக்கதையாம். அசத்தல் ப்ளாஷ்பேக், அட்டகாசமான மதுரை மிரட்டல் காட்சிகள் என பல ஸ்பெஷல் விஷயங்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது. இதனால் இரு வேறு கெட்டப்புகளில் ரஜினியை திரையில் காண இப்போதே தயாராகிவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.
Discussion about this post