இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் , ராணுவத்துக்குள் நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் பிரபாகரன் நந்திக்கடல் வழியாக தப்பி வெளிநாடு சென்று விட்டார் என்று தகவல் வெளியாகின.
இந்நிலையில் இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் என்றம் ,அவர் மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , மூத்த தலைவர் பழ. நெடுமாறன் கூறுவதுபோல தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
பழ. நெடுமாறன் மிகுந்த மரியாதைக்குரியவர். அவர் கூறுவதைப்போல பிரபாகரன் மீண்டும் வந்தால் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியடையும் எனவும் பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post