தனது 74வது பிறந்த நாளை கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி கொண்டாடிய பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன், மீடூ இயக்கத்தைப் பற்றிய தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பெண்களுக்கு எதிரான இத்தகைய மோசமான செயல்கள் கண்டிக்கத்தக்கது என்றும் அவர்களது பணி இடத்தில் பாலியல் தொல்லைகள் அநாகரிகமானது எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், புகழ் பெற்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் ஸப்னா மோடி பவ்னானி, தனது ட்விட்டரில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனை நேரடியாகத் தாக்கியுள்ளார். அப்பதிவில், அமிதாப் பச்சனின் பாலியல் தொல்லைகளைப் பற்றி பல பெண்கள் கூறி உள்ளதை அறிந்துள்ளேன். அவர்கள் வெளியே வந்து உண்மையைச் சொல்ல வேண்டும். அவருடைய போலித்தனம் மிகவும் சோர்வடையச் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post