இரவில் தூக்கமின்மையால் கண் பிரச்சனைகள் வர வாய்பு உண்டு. கண் எரிச்சல், கண் சிவப்பு நிறமாக மாறுதல் முதலிய பிரச்சனைகளுக்கு காரணம் தூக்கமின்மையே. தூங்கும் முன் 2 மனி நேரத்திற்கு முன்பு போன், லேப்டாப், போன்ற எதுவும் உபயோகிக்க கூடாது.
கண்டிப்பாக சூரிய வெளிச்சத்தில் போக வேண்டும். நேரடியாக சூரியனை பார்க்க வெண்டும். நமது கண்ணில் போட்டோ சென்ஸ்ட்டிவ் செல்ஸ் உள்ளன. அவை நேரடியாக மூளையில் உள்ள பிட்யூட்டரி கிளாண்ட்க்கு தொடர்பு உடையது. எனவே சூரிய வெளிச்சத்தில் செல்வது கண்களுக்கு நன்மையே.
நாம் வெளியே சென்று வந்ததும் அல்லது ஒரு நாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை கண்களை சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்களை சுத்தம் செய்வதினால் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேலும் கண்களுக்கு உபயோகிக்கும் கண் மை, ஐலைனர், மஸ்காரா போன்ற்வை பாதுகாப்பானதா என்பதை அறிந்து உபயோகிக்கவும்.
வெள்ளரிக்காய் உண்பதாலும்,கண்ணின் மேல் வைப்பதாலும், குளிர்ச்சியடைகின்றன. மேலும் கருவளையம் நீங்கும். கண்களை பாதுகாக்க தகுந்த வைட்டமின் ஏ நிறைந்த காரட் தான் முதல் மூலதாரனமாக உதவுகிறது. மேலும் கீரைகள், பல பருப்புகள், மற்றும் பழங்கள் உதவுகிறது.
குழந்தைகளை சிறுவயதில் இருந்தே இவ்வாறான பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வைத்தால் கண்பிரச்சனையை தவிர்க்கலாம்.
Discussion about this post