சென்னையில் நடந்த புதியப்படம் பாடல் வெளியிட்டு விழாவில், திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களை இயக்கிய பேரரசு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முன்பெல்லாம் நடிகர்கள் கதை கேட்பார்கள். ஆனால், தற்போது மேடைகளில் நடிகர்கள் கதை சொல்ல தொடங்கி இருப்பதாக கூறினார். அதனால், இயக்குனர்கள் என்ன சொல்வது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நிற்பதாக அவர் தெரிவித்தார். பேரரசு தெரிவித்த இந்த கருத்து, நடிகர் விஜயை சாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், மேடைகளில் குட்டி கதை சொல்பவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post