மீடு விவகாரத்தில் பிரச்சனையை தீர்த்து வைக்க வி த்ரி என்ற குழு அமைக்கப்படும் என நடிரும் தென்னிந்திய திரைப்பட சங்க பொதுச்செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அபோது நிரூபர்கள், மீ டூ’ ஹாஷ்டாக் மூலம் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பெண்கள் பாலியல் புகார்கள் குறித்து பதிவிடுவது பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த விஷால்.
பாலியல் தொல்லைகளை நடிகைகள் தாமதிக்காமல் உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் நிச்சயமாக விரைந்து நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.
நடிகை அமலாபால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது , அதை எங்களிடம் தெரிவித்தார். அப்போது நானும் கார்த்தியும் உடனடியாக மலேசியாவுக்கு தொடர்பு கொண்டு பேசி, பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்தோம். இதுபோல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் உடனே எங்களிடம் சொன்னால் நிச்சயம் விரைந்து நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிட்டார்.
படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனக் குறிப்பிட்ட விஷால், நான் எப்போதும் ‘மீ டூ’ வுக்கு ஆதரவாக இருப்பேன் எனக் குறிப்பிட்டார்.
தமிழ் திரையுலகில் பாலியல் கொடுமை பற்றிய ‘மீ டு’ விவகாரம் குறித்து விசாரிக்கவும் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ‘வி த்ரி’ என்ற 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து பொது வெளியில் குற்றச்சாட்டுக்களை கூறி நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், நமது பிரச்னையை நாமே வி த்ரி குழுவின் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனறும் விஷால் விளக்கமளித்துள்ளார்.
இதன்மூலம் பாலியல் துன்புறுத்தல்களுக்கு பஞ்சாயத்து செய்ய நாங்க இருக்கோம் என விஷால் குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Discussion about this post