ஹிந்தி நடிகர் அலோக்நாத் அலோக்நாத் மீது பாலியல் புகார் கூறிய இயக்குநரும் எழுத்தாளருமான வின்டா நந்தாவிடம் (Vinta Nanda) அலோக்நாத்தின் மனைவி 1 ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.‘
அலோக்நாத் தன்னை 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுவில் போதை பொருள் கலந்துகொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக, பெண் இயக்குநர் வின்டா நந்தா #மீடூ -வின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அலோக்நாத்தின் மனைவி ஆஷு (Ashu) அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் வின்டா நந்தா பாலியல் புகார் இணையதளத்தில் பரவியநிலையில் தானும் தன் கணவரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாகக் கூறியுள்ளார். வின்டா நந்தா 1 ரூபாய் இழப்பீடும் மன்னிப்புக் கடிதமும் வழங்க உத்தரவிடுமாறும் மனுவில் அலோக் நாத்தின் மனைவி கோரியுள்ளார்.
Discussion about this post