
இந்தி பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சுபாஷ் கை போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கூறி இருந்தார். இப்போது நடிகையும், மாடல் அழகியுமான கேட் சர்மாவும், சுபாஷ் கை பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாத் ரூம் சென்ற என்னை பின் தொடர்ந்து வந்த டைரக்டர் சுபாஷ் கை, எனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றதாக கூறினார். அங்கு என்னை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க முயன்றதாகவும் நான் அவர் பிடியில் இருந்து விடுபட்டு கிளம்ப தயாரானேன் எனவும் கூறிய நடிகை கேட் சர்மா, உடனே இன்று இரவு என்னுடன் தங்காவிட்டால் படத்தில் அறிமுகம் செய்ய மாட்டேன் என்று மிரட்டியதாக தெரிவித்தார். ”
Discussion about this post