அஜித்குமார் நடிக்கும் விஸ்வாசம் பட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையில் விஸ்வாசம் படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடக்கிறது. இதில் அஜித்குமார், நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்கள். ஓரிரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது. விஸ்வாசம் படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இதில் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் வருகிறார்.
Discussion about this post