
தனியார் தொலைக்காட்சியில் பேசிய நடிகை கங்கனா ராணவத், குயின் படத்தில் நடிக்கும் போது, எனக்கு இயக்குனர் விகாஸ் பாஹல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறினார். திரைத்துறையில், பெண்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் ஆண்கள் குறைவானவர்கள் என்றும் நடிகைகள் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சருக்கு இறையாவதாகவும் தெரிவித்தார்.

சில நேரங்களில் செக்ஸ் கொடுமையோடு பெண்களை அடிக்கவும் செய்வதாகவும் கங்கனா ராணவத் கூறினார். மேலும், மனைவிமார்களை கோப்பைகள் போல் வீட்டில் வைத்து விட்டு, இளம் பெண்களை எஜமானிகள் போல் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்றும் காதலை ரகசியமாக வைக்க சொன்னதால் அவரிடம் இருந்து விலகியதாகவும் கடந்தாண்டு கங்கனா ராணவத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post