விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக விளையாடும்போது ரோகித் சர்மாவிற்கு ரசிகர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இதில் காலிறுதி போட்டி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாததால் ரோகித் சர்மா மும்பை அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார்.
அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி குதித்து ஆடுகளத்தை நோக்கி வேகமாக ஓடிவந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்த அவர் திடீரென ரோகித்தின் காலை தொட்டு வணங்கினார். அத்துடன் விடாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் முத்தம் கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத ரோகித் சர்மா செய்வதறியாது திகைத்தார். பின்னர் மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தபோது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து வணங்கிவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தவாறு இருக்கைக்கு சென்றார்.
Discussion about this post