கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதற்கு, ஒருமையில் பேசியும், கோபத்தில் வரைமுறை இல்லாமல் சத்தம் போட்டும் பாரதிராஜா ரியாக்ட் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இலங்கை கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கம் நேற்று(திங்கள் கிழமை அக்டோபர் 15) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மூத்த ஒளிப்படப் பிடிப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலான இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இலங்கை எம்.பி. சி. சிறிதரனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் திங்கள் கிழமை இரவு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து மீதான மீ டூ பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
The film Director Bharathiraja has annoyed over the question on MeToo campaign, a reporter in Jaffna has raised the latest controversy against lyricist Vairamuthu. He was furious and asked "is there any proof", he abruptly ended the press meet and left. #Bharathiraja #Metoo pic.twitter.com/irKw0FTduc
— IndSamachar News (@Indsamachar) October 16, 2018
இதற்கு பதிலளித்த பாரதிராஜா “என் தொழில் சம்பந்தமாக, சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் சொல்வேன். டூ மீட் மீ; ஐ மீட் யூ அவ்வளவுதான்” என பதிலளித்தார். இதன் பிறகும் ‘ஒரு இயக்குநராக பாலியல் புகார்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என தொடர்ந்து பாரதிராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா, “மீ டூ-ன்னா என்னா? சொல்லு. மீ டூ-ன்னா என்னா? என்ன பிரச்சனை? என்ன பிரச்சனை” என கோபப்பட்டார்.
இதனைத் தொடர்ந்தும் மற்றொரு செய்தியாளர், ‘வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறதே?’ என கேள்வி எழுப்ப, “நீ பார்த்தியா? நீ பார்த்தியா? கேள்விப்பட்டிருக்கிற. கேள்விபட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. You have seen… It is my Proof-ன்னு சொன்னா பதில் சொல்லலாம். நான் ஏற்கனவே வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என கூறிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார். பாரதிராஜாவின் இந்த ஆவேசம் யாழ்ப்பாண செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
Discussion about this post