மும்பை: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி 116 புள்ளிகள்ளுடன் முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகள் முதலிடத்தில் நீடிக்கிறார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 812 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், அஸ்வின் 8-வது இடத்திலும், இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்திலும் உள்ளனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், அஸ்வின் 5-வது இடத்திலும் உள்ளனர்.
Discussion about this post