தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து பிரபலமான நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, டிவிட்டரில் ஸ்ரீலீக்ஸ் என்ற ஒற்றை சொல்லால் பிரபலமானவர் தான் ஸ்ரீரெட்டி. ஹிட் படங்களில் நடித்த நடிகைகளின் பெயர் கூட மக்களுக்கு நினைவில் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஸ்ரீரெட்டியை அறியாதவர்களே கிடையாது. எந்த அளவிற்கு சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. இப்போது போய்க்கொண்டிருக்கும் மீ டூ ஹேஷ் டேக் விவகாரம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனும்படிக்கு, தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து ஹாட் ட்வீட் போட்டவர் தான் ஸ்ரீரெட்டி.
ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த் என ஆரம்பித்து ராகவா லாரன்ஸ் வரை போட்டுக்கொடுத்து புகழ் தேடிக்கொண்டவர் இவர். டோலிவுட்டும் , கோலிவுட்டும் இவர் பேரை கேட்டாலே பதறும் அளவிற்கு பிரபலமான பிறகு தற்போது இவர் டைரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் அவரது வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்ட கதைதான் .
டோலிவுட்டில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் ஸ்ரீரெட்டிக்கு கோலிவுட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு தான். இதனால் சென்னையில் வீடெடுத்து தங்கி இருக்கு இவர் தற்போது பட வேலையில் பிஸியாக இருக்கிறார். அதனாலேயோ என்னவோ சமீபகாலமாக ஸ்ரீலீக்ஸ் அப்டேட் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.
ஆனாலும் ஸ்ரீரெட்டி சமூக வலைதளங்களில் அப்டேட்டடாக தான் இருக்கிறார். சமீபத்தில் கூட தான் வசிக்கு ஏரியாவுக்கு அருகில் உள்ள, கையேந்திபவன் ஒன்றில் சென்று தோசை சாப்பிட்ட ஸ்ரீரெட்டி, அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். ஸ்டார் ஹோட்டலில் கூட இவ்வளவு சுவையான தோசையை நான் சாப்பிட்டது இல்லை. ரொம்ப நல்லா இருக்குது இந்த தோசை. நீங்களும் ரொம்ப அன்பா பரிமாறினீங்க என , கையேந்திபவனில் இருந்த பெண்ணை பாராட்டியதுடன் அவருடன் புகைப்படம் வேறு எடுத்திருக்கிறார்.
இதனை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. இந்த பொண்ணு போகிற வேகத்தை பார்த்த சீக்கிரமே அரசியலுக்கு வந்திடும் போல இருக்கே என அவரின் நடவடிக்கைகளை பார்த்து கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டது கோலிவுட் வட்டாரம்
Discussion about this post