இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்புக் குழு வழக்கு பதிவு செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகம் மீது சூதாட்டம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்புக் குழுவினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான சனத் ஜெயசூர்யா, இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல், இடையூறு ஏற்படுத்துவது அல்லது தாமதம் செய்தல், ஆவணங்களை சேதப்படுத்தல், மறைத்தல் அல்லது அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் ஜெயசூர்யா மீது சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து 2 வாரத்துக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post