இதற்கு தேவையான மருந்துகள்
மாதுளம்பழச் சாறு – 500 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு – – 500 “
இஞ்சிச் சாறு – – 125 “
இந்துப்பு – – 50 “
பனை சர்க்கரை – – 1250 “
இந்த 3 வகையான சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து பனை சர்க்கரை சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்து இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து ஒரு தனி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.இந்த பானத்தை 5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் கலந்து இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் குடித்து வரவும்.
அவ்வாறு குடித்து வந்தால் செரியாமை (அஜீர்ணம்), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக) போன்ற பிரச்சனைகள் எளிதில் தீரும்.
இவ்வாறு எளிதில் தயாரிக்க கூடிய பானம்தான் இது. தயாரிப்பது மிக எளிது. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும்.
Discussion about this post