ரஜினி என்றாலே மாஸ் தான். என்ன தான் மிகப்பெரிய ஸ்டாராக இருந்தாலும் அந்த பந்தாவெல்லாம் இல்லாம, எளிமையா பழகுறது தான் அவரோட ஸ்பெஷாலிட்டி. இதனாலேயோ என்னவோ ரஜினிக்கு என மிகப்பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ரஜினி தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் எந்திரன்2.0 படமும் கூட விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையிலவர் அரசியல் கட்சி வேறு சீக்கிரமே ஆரம்பிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனிடையே சமீபத்தில் #எனக்குப்பிடித்த ரஜினி காந்த் என்ற ஹேஷ் டேக் ஒன்று ரசிகர்கள் மத்தியில்பிரபலமடைந்து வருகிறது. இந்த டேக்கை உருவாக்கியது வேறு யாருமில்லை…பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் தான்.
இவர் தீவிர கமல் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. கமலின் குரலில்பேசி பலமுறை கமலாலேயே நேரடியாக பாராட்டை பெற்றவர் ரோபோ சங்கர். அவர் ரஜினியை புகழ்ந்து இந்த ஹேஷ் டேக்கை உருவாக்கிட மிகப்பெரிய காரணம் இருக்கிறது. அதனை தன்னுடைய ட்விட்டர் பதிவில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார் ரோபோ சங்கர்.
கூச்சப்பட்டு விலகி நிக்கிறவங்கள கூட தன்னோட சேர்த்து அரவணைத்து நிற்க வைக்கிறத ரஜினி கிட்ட நிறைய முறை பார்க்கலாம்,பாகுபாடு என்ற பேச்சுக்கேஇடமில்லை,எல்லாரையும் சரிசமமா பார்க்கும்,சரிசமமா நேசிக்கும் மனிதன் ரஜினி
இதனால தான் இவர் எளிமைய யாரோடவும் ஒப்பிடவே முடியாது,#எனக்குபிடித்தரஜினி pic.twitter.com/y6fQfVyo0F
— Robo Shankar (@ActorRoboSankar) October 14, 2018
”கூச்சப்பட்டு விலகி நிக்கிறவங்கள கூட தன்னோட சேர்த்து அரவணைத்து நிற்க வைக்கிறத ரஜினி கிட்ட நிறைய முறை பார்க்கலாம்,பாகுபாடு என்ற பேச்சுக்கேஇடமில்லை,எல்லாரையும் சரிசமமா பார்க்கும்,சரிசமமா நேசிக்கும் மனிதன் ரஜினி இதனால தான் இவர் எளிமைய யாரோடவும் ஒப்பிடவே முடியாது,#எனக்குபிடித்தரஜினி” என அந்த ட்வீட்டில் கூறி இருக்கிறார் ரோபோ.
மேலும் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகளை சந்தித்தபோது எடுத்த படத்துடன், பறை அடிக்கும் ஒரு ரசிகருடன் ரஜினி எடுத்துகொண்ட படத்தையும், இந்த ட்வீட்டில் இணைத்து பதிவிட்டிருக்கிறார் ரோபோ.தொடர்ந்து ரோபோ உருவாக்கி இருக்கும் இந்த ஹேஷ் டேகில் ரஜினி ரசிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் ரஜினியை குறித்து பகிர்ந்துவருகின்றனர். இதனால் இந்த டேக் இப்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்திருக்கிறது.
Discussion about this post