என்ன தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் ரசிகர்களுக்கு எப்போதுமே தல தோனி தான். தோனிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ அதே அளவிற்கு அவரது மகள் ஸிவாவிற்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த குட்டி க்யூட் ஸீவாவின் சின்ன சின்ன க்யூட் விடியோக்களும் ,புகைப்படங்களும் மிகப்பிரபலம். ஸீவாவின் வீடியொ எப்போது இணையத்தி வந்தாலும் அது சூப்பர் டூப்பர் ஹிட் தான்.
கடந்த ஆண்டு கூட ஸீவா பாடிய மலையாளப்பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது. சமீபத்தில் கூட சென்னை சூப்பர் கிங்க்ஸுக்காக தோனி விளையாடிய போது, கிரெளண்டில் கலக்கலாக வந்து அனைவர் மனதையும் அள்ளி சென்றார் ஸீவா தோனி.
சமீபத்தில் ஸீவா தோனி உடற்பயிற்சி செய்யும் க்யூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸீவா ப்ளாங்க்ஸ் செய்யும் இந்த வீடியோவினை, சாக்ஷி சிங் தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோ பகிர்வில், ஸீவா தான் என்னை விட அதிக நேரம் ப்ளாங்க்ஸ் செய்கிறாள் என்றும் கூறி இருக்கிறார் சாக்ஷி. ஸீவாவின் இந்தக்யூட் வீடியோவிற்கு தற்போது லைக் ஹிட் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
Discussion about this post