”மாஸ்டர் செக்கப்” என்பது உடல் முழு பரிசோதனை செய்து கொள்வதாகும். அப்படி என்றால் “சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது. நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, “நீ நோயாளிதான்” என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளாராக்கும் “தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.
அல்லது “அப்படியிருக்கும், இப்படியிருக்கும்” என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது. நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான். இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் நன்கு படித்தவர்கள், பணம் படைத்தவர்கள், புகழடைந்தவர்கள்.
சர்க்கரை நோய் ரீடிங் 80/140, இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, சிறுநீரக நோய் ரீடிங் 1.02, கொழுப்பு அளவு, உப்பு அளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன மருத்துவம். இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம். இத்தகைய ரீடிங்குகள் நவீன விஞ்ஞானத்தின் நன்கொடைகள்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது. உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது.யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது. உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள மனிதனும், வெவ்வேறு தட்பவெப்ப நிலை, வெவ்வேறு உணவுபழக்கம், வெவ்வேறு உணவு உண்ணும் முறை, வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு ஜீன் கட்டமைப்பில் இருக்கிறான். இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே இருக்கும். அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.
அப்படியானால், உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும். என்று ஆங்கில மருத்துவ உலகம், அடம் பிடிப்பது எப்பேற்பட்ட முட்டாள் தனம். இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய அறியாமை. எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் இந்த நூற்றாண்டின் மாபெரும் வியாபார மோசடி.
அப்படியானால் ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது மற்றும் இல்லாதது எப்படி தெரிந்துக் கொள்வது? எப்படி வரும் முன் காப்பது? இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுவது எப்படி?
தரமான பசி
தரமான தாகம்
தரமான தூக்கம்.
“தரம்” என்ன என்பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே சொன்னது போல் அவை மூன்றும் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என உறுதி செய்து கொள்ளலாம்.
Discussion about this post