பிரதமர் மோடி, தனக்கு பரிசாக கிடைத்த பொருட்களை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தம் செய்யும் பணிக்காக அளிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, அவரிடம் இருந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. சுமார் 300 ரூபாயிலிருந்து இரண்டரை லட்சம் வரை ஒவ்வொரு பொருட்களும் ஏலத்துக்கு எடுக்கப்பட்டது.
இதில், தனது தாயுடன் மோடி இருக்கும் போட்டோ 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தேசியக் கொடியின் பின்னணியில் மஹாத்மா காந்தியுடன் மோடி இருப்பது போன்ற போட்டோ இரண்டரை லட்சத்துக்கு ஏலம் போனது.
Discussion about this post