நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. ரிக் இயந்திரத்தை பயன்படுத்தி குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் பாறைகள் கடினமாக இருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக திறன் கொண்ட மற்றொரு இயந்திரமும் ராமநாதபுரத்திலுருந்து கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘மணப்பாறை பகுதியில் பாறைகள் கடினமாக இருப்பதால் பள்ளம் தோண்டுவது சிரமமாக இருக்கிறது. இந்த அளவிற்கு கடினமான பாறைகளை பார்த்தது இல்லை. அதனால் நாங்கள் கணித்தபடி, இரண்டு இயந்திரங்களாலும் பள்ளம் தோண்ட முடியவில்லை. சுமார் ஒரு அங்குல அளவிற்கு குழந்தையின் மேல் மண் விழுந்துள்ளது.
அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அசைவின்றி உள்ள குழந்தையிடம் இருந்து சுவாசத்தை கேட்க முடியவில்லை. இதுதொடர்பாக துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்’ என கூறியுள்ளார்.
Discussion about this post