பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தள பக்கங்களில் தாங்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து துணிச்சலாக கூறி வருகின்றனர்.
இதில் பல பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் மீ டூ சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை ரித்விகா சிறுவயதில் அக்கம் பக்கத்தினரால் தனக்கு பாலியல் தொல்லை நேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது இது பற்றி பெண்கள் தைரியமாக பேசத் தொடங்கிவிட்டனர். இனி இதை மூடி மறைக்க தேவையில்லை என ரித்விகா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் குறித்து பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால், இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அம்மாவிடம் கூறிவிடுவார்கள். பிரச்னையும் தீர்ந்துவிடும். நான் என் பெற்றோரிடம் சொல்லாமல் பயத்தில் மறைத்துவிட்டேன். தற்போது அதற்காக வருந்துகிறேன். இது குறித்து ஓபனாக பேசுவது நல்லது தான்’ என்று ரித்விகா கூறியுள்ளார்.
Discussion about this post