தமிழில், 5 ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசி கணேசன் மீது குறும்பட இயக்குநரும், கவிஞருமான லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான புகார் குறித்து இயக்குநர் சுசி கணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லீலா மணிமேகலை என்னிடம் இரண்டு உதவிகள் கேட்டார். அதை என்னால் செய்ய முடியவில்லை. நான் உதவி செய்யாததால், இதுபோன்ற அருவருப்பான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தியுள்ளார்.
மீ டூ-வை தனது சொந்த பழிவாங்கலுக்காக பயன்படுத்தியுள்ளார். இவர்களை போன்ற சில சுயநலவாதிகள் மீ டூ இயக்கத்தை திசைத்திருப்ப முயற்சிக்கின்றனர். பொய் குற்றச்சாட்டு கூறியதற்கு லீனா மணிமேகலை தனது பதிவிலேயே மன்னிப்புக் கேட்க வேண்டும்.
கற்பு என்பது இருபாலருக்கும் உரித்தான ஒன்று. இந்த அவதூறு குற்றச்சாட்டின் மூலம் எனது கற்பை லீனா மணிமேகலை சூறையாடிவிட்டார். எனது குடும்பம் வேதனையில் வடிக்கும் கண்ணீரை நீதிமன்றம் சென்று கழுவும் வரை எந்த பக்கமும் சாயாமல் காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுகக் பேட்டியளித்த சுசிகணேசன், இதுபோன்று விளம்பரம் தேடிக் கொள்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் என்றும் காட்டமாக பதிலளித்துள்ளார். லீனா மணிமேகலையால் தனது குடும்பத்தில் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மனித உறுப்புக்களை அப்பட்டமாக எழுதி கவிதை எனக் கூறிக் கொள்ளும் லீனா மணிமேகலைக்கு தன்னைப் பற்றி புகார் அளிப்பதற்கு அருகதை இல்லை என்றும் சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post