தமிழ் சினிமாவில் சில ஆளுமைகளின் கூட்டணிகள் ஆஸம் கூட்டணிதான். பொதுவாக ஹீரோ – ஹீரோயின், இயக்குநர் – கேமெராமேன், ஹீரோ – இசையமைப்பாளர் என்று தான் ஹிட் கூட்டணி இருக்கும். ஆனால் இயக்குநர் – இசையமைப்பாளர் கூட்டணி அரிதுதான். ஆனால் அமைந்துவிட்டால் அது போல் அசத்தல் வேறேதும் இருக்காது. அதை நிரூபித்துக் காட்டியவர்களில் முக்கியமானது இயக்குநர் செல்வராகவன் – இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கூட்டணி.
துள்ளுவதோ இளமையில் துவங்கியது அந்த பயணம்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என்று பட்டையை கிளப்பியது. எந்த வேதனையில் இருப்பவனையும் தூங்க வைக்கும் பாடல்கள், தூக்கத்திலும் மறக்க முடியாத டியூன்க்ள் என்று இசை ரசிகன் ஒவ்வொருவனையும் மெர்சல் செய்தன.
அப்பேர்ப்பட்ட கூட்டணி இடையில் பிரிந்தது. செல்வராகவன் தனது ‘மயக்கம் என்ன’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரையும், ’இரண்டாம் உலகம்’ படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத்தை இசைக்க வைத்தார். அவர்கள் அதிகபட்ச நியாயம் செய்திருந்தார் தான் . ஆனாலும் செல்வா படத்தில் யுவனை அநியாயத்துக்கு மிஸ் செய்தனர் இசைப்பிரியர்கள்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் செல்வா – யுவன் கூட்டணி இணைந்திருக்கிறது.
சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கியிருக்கும் ‘என்.ஜி.கே.’ படத்துக்கு யுவன் தான் இசை. ஆல்பம் பட்டாசாய் வந்திருக்குது எனும் நிலையில் தற்போது இரண்டு பாடல்களுக்கு மட்டும் ரீ – டியூன் போட சொல்லி ஆர்டர் போட்டிருக்கிறாராம் இயக்குநர். மிரண்டுவிட்டது அந்த படத்தின் க்ரூ.
ஆனால் சொல்வது தன் அண்ணனுக்கு நிகரான செல்வா என்பதால் யுவன் எந்த மறுப்பும் சொல்லாமல் ஓ.கே. சொல்லிவிட்டாராம். ஆனாலும் மனசுக்குள் ஒரு ஸ்வீட் ஷாக்தான் யுவனுக்கு. அது…செல்வா முன்பு மாறியில்லை, ரொம்பவே மாறிட்டார்! என்பதுதான். ஆம் செல்வாவிடம் முன்பிருந்த இறுக்கமெல்லாம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது என்கிறார்கள்.
Discussion about this post