சினி சிப்ஸ்:
* செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்காக இயக்குநர் மணிரத்னம் கொடுத்த காக்டெயில் பார்ட்டியில் கலந்து கொண்ட பல சினி வி.ஐ.பி.க்கள் செம்ம தள்ளாட்டம். மணி மேல் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள் தமிழ் சினி உலகில் தர்மம் எதிர்பார்க்கும் சீனியர்கள்.
(உங்க படம் மாதிரியே இதையும் இருட்டிலேயே நடத்தியிருக்கலாம் பாஸ்)
* தேவர் மகன் -2 உருவாகும் வாய்ப்பிருக்கிறது! என்று கமல்ஹாசன் சொன்னாலும் சொன்னார் செம்ம பரபரப்பில் இருக்கிறது தமிழ் சினிமா உலகம். தேவர் மகன் பார்ட் – 1 எடுக்கப்பட்ட பொள்ளாச்சியிலேயே இதற்கும் ஷூட், இளையராஜா மீண்டும் இணைகிறார், ரேவதி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்!….என்று ஆளாளுக்கு அடித்து நொறுக்குகிறார்கள் அவதானிப்புகளை.
(பாஸ், ‘இது மேல் சாதி படம்’ அப்டின்னு ஒரு கூட்டம் கொடி பிடிக்க ரெடியாகுற சேதி தெரியுமா?)
* பகத் பாசிலை கண்ணாலம் கட்டிக்கினு அவிடெ பூமியில் செட்டிலாகிவிட்ட நஸ்ரியா பழைய நடிகைகள் பாணியில் மீண்டும் களமிறங்கிவிட்டார். பிருத்விராஜின் தங்கையாக மலையாளத்தில் அவர் செய்த பேய்-ப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழுக்குள்ளும் தலைகாட்டுகிறார் மேடம்.
யெஸ்! டபுள் ஹிட் இயக்குநர் வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ‘பிங்க்’ ரீமேக்கில் மேடம் நஸ் பேபியும் இருக்கிறார்! என்கிறார்கள்.
(நைட்டியை தூக்கி செருகிட்டு, டூத் பிரஸ்ஸை வாயில செருகிட்டு ரிங்கரிங்கா! ஸ்டெப்ஸ் மறுபடியும் உண்டா நஸ்!)
* கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் படத்தில் முதலில் ஸ்ருதி! என்றார்கள். பின் அவர் மறுத்ததால் அக்ஷரா என்று தகவல் தடதடத்தது. இப்போது மீண்டும் ஸ்ருதியே களமிறங்குகிறார்! என்று ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் பக்கம் பட்சி படபடக்கிறது.
(ரெட்டை புறாவுல எந்த புறா சிக்கினாலும் ஜிலுஜிலுப்புதான் சீயானுக்கு)
* வட சென்னை பார்ட் 1 ரிலீஸாகிவிட்ட நிலையில், பார்ட் 2வுக்கும் முன்னர் வெற்றி மாறனும், தனுஷும் வேறொரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று தனுஷே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைக்கேட்டு தனுஷின் ரசிகர்கள் காண்டாகிவிட்டனர். அவரது அலுவலகத்துக்கே போன் போட்டு ‘சிறுத்தை சிவாவை நம்பி அஜித் பேரை கெடுத்த கதையாகிட வேண்டாம் தலைவா!’ என்றிருக்கிறார்கள்.
தனுஷும் யோசிக்க துவங்கிவிட்டாராம்.
(தனுஷ் ரசிகர்களுக்கு இருக்குற தகிரியம் தல ரசிகர்களுக்கு இல்லாம போனதுதான் பரிதாபம்)
Discussion about this post