கோயம்பேடு காய்கறிச் சந்தையில், சின்ன வெங்காயம் இன்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், இன்று 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயம் பெருமளவில் அழுகியதால் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தைப் போலவே, கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post