ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் 100% காதல் திரைப்படத்தின் ‘ஏனடி ஏனடி’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா இணைந்து நடித்த ‘100% லவ்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தை சந்திரமௌலி இயக்குகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் காதல் தோல்வியில் ஜி.வி.பிரகாஷ் பாடுவதாக அமைந்துள்ளது. ஷாலினி பாண்டேவும் அவரும் காதலித்த நிலையில் ஷாலினிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிக்கு ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டு அங்கு பாடுவது போல் உருவாகியுள்ளது.
“ஏனடி ஏனடி காற்றிலே ஆடும் காகிதமாய்
தூரமாய் போக நேர்ந்தது ஏனடி
கானலாய் தெரிகிற காதலி உன்னையே என்று
நம்பியே வருகிறேன் சென்றது வீணடி”
என்ற பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கேசவ் வினோத் பாடியுள்ளார். மெலடியில் உருவாகியுள்ள இந்தப் பாடல் காதலர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். தம்பி ராமையா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Discussion about this post