காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமூகவலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ள புதிய ஆங்கில வார்த்தை குழந்தைகளிடம் வரவேற்பை பெற்று வருகிறது. சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “floccinaucinihilipilification” என்ற 29 எழுத்துக்களை கொண்ட வார்த்தையை பதிவிட்டிருந்தார்.
இதனால் ஈர்க்கப்பட்ட சிறுவர்களும், பெரியவர்களும் அந்த வார்த்தையின் சரியான உச்சரிப்பை பதிவு செய்து சசிதரூரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர். நாடு முழுவதிலும் பல்வேறு குழந்தைகள் சிறுவர்கள் சிக்கலான இந்த வார்த்தையை பயிற்சி செய்யும் காட்சிகள் வைரலாவதால் இணையத்தில் அது ட்ரெண்டிங்காக இருக்கிறது.
29 எழுத்துக்களை கொண்ட இந்த நீளமான ஆங்கில வார்த்தை “பயனற்ற செயல்” என்பதை குறிக்கும் சொல்லாகும், இந்த வார்த்தையை பிரதமர் மோடி குறித்த தமது புத்தகத்தில் பயன்படுத்தியிருப்பதாக சசிதரூர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post