பிரிட்டன் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆய்வாளரும், இயற்பியல் துறை ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஹாவ்கிங் கடந்த மார்ச் மாதம் தனது 76-வது வயதில் காலமானார். பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஹாவ்கிங் அண்டைவியல் துறையில் செய்த ஆய்வுகள் பிரபஞ்சம் குறித்த பல கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக அமைந்தன.
கருத்துகள்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள், இயற்பியல் துறை ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. காலத்தின் துவக்கம் மற்றும் கோட்பாடுகள் குறித்த அவரது ஆரய்ச்சியால் பல விஞ்ஞானிகளை பிரம்மிக்க வைத்துள்ளன. எழுத்தாளராகவும் பரிணமித்த இவரது படைப்புகளில் ” the brief history of time” அறிவியல் புத்தகங்களிலேயே மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் “brief answers to the big questions” என்ற தலைப்பில் அவரை தனது இறுதி நூலை எழுதினார். ஆனால் அந்த நூலை எழுதிக்கொண்டிருந்த போதே ஹாவ்கிங் இறந்துவிட்டார்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற மிகப்பெரிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் அதற்கான விடையும் இடம்பெற்றுள்ளது. அந்த புத்தகத்தில் அவர் கடவுள் இல்லை என்பதை உறுதியாக கூறியிருக்கிறார். பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கை தத்துவங்களை விளக்கும் விதமாக எழுதப்பட்டு பாதியிலேயே விடப்பட்ட இந்த புத்தகத்தினை ஹாவ்கிங் குடும்பத்தினர் சக கல்வியாளர்களை கொண்டு எழுதி முடித்திருக்கிறார்கள்.
Discussion about this post